அதிகாரம் #71 குறிப்பு அறிதல்
(பிறரது உள்ளக் கருத்தை குறிப்பால் உணர்ந்தறிதல்)
பொருட்பால் | அங்கவியல் | குறள்# 701-710
701
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி.
ஒருவர் எதுவும் சொல்லாமலே உள்ளத்துள் எண்ணுவதை, அவருடைய முகத்தின் குறிப்பைக் கொண்டே உணர்ந்தறியும் திறனுடையவர், வற்றாத கடல்சூழ் உலகிற்கே அணிகலன் போன்றவர் ஆவார்.
702
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.
ஒருவரின் மனதினுள் பொதிந்துள்ள எண்ணத்தை எவ்வித ஐயமுமின்றி உணரவல்ல ஆற்றல் கொண்டவர் மனிதராக இருப்பினும், அவரை தெய்வத்திற்கு சமமாக மதித்திடல் வேண்டும்.
703
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
எவருடைய முகத்தின் குறிப்பினையும், தம் பார்வையாலேயே உணர்ந்தறியும் திறன்மிக்க வல்லவரை, நாட்டில் எத்தகைய செல்வத்தையும் கொடுத்தாவது அவரைத் தம்முடன் இணைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை
உறுப்பு ஓர்அனையரால் வேறு.
705
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்?
ஒருவர் உள்ளத்தால் எண்ணுவதை அவர் சொல்லாமலே, அறிந்துணரும் திறன் பெற்றவருடன் அவ்வாறான ஆற்றல் இல்லாதவர்கள் உடல் உறுப்பால் ஒத்திருந்தாலும், அறிவால் வேறுபட்டவர் ஆவார்.
705
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்?
ஒருவரது முகக்குறிப்பினைக் கொண்டு, அவரது மனதின் குறிப்பினை அறிந்திட இயலாததாயின் மனித உறுப்புகளுள் சிறந்தவையான கண்களால் என்ன பயன்?
706
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
ஒரு கண்ணாடி தன் அருகில் இருக்கும் பொருளை வெளிக்காட்டுவதைப் போல, ஒருவரது உள்ளத்துள் நிகழ்வதை அவர்தம் முகத்தினூடே வெளிக்காட்டி விடும்.
707
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்?
ஒருவரது உள்ளம் வெளிப்படுத்தும் விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு காட்டும் அவரது முகத்தைக் காட்டிலும், முதிர்ந்த அறிவு மிக்கது வேறு உண்டோ?
708
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்.
ஒருவரது உள்ளக் குறிப்பை உற்று நோக்கி, அவர் எண்ணியதை உணரும் வல்லமை கொண்டோரைத் துணையாகப் பெற்றால், அவருடைய முகம் பார்த்து எதிரே நின்றாலே போதும்.
709
பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
பிறரது கண் பார்வையின் வேறுபாடுகளைக் கண்டுணரும் திறன் பெற்றவரிடத்தே, ஒருவருடைய உள்ளத்தின்பால் இருப்பது, நட்புணர்வா பகைமையுணர்வா என்பதை அவரது கண்களே காட்டிக் கொடுத்துவிடும்.
710
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.
நுண் அறிவு உடையவர்களுக்கு பிறரது உள்ளத்தை அறிந்துணரும் கருவியாகப் பயன்படுவது அவருடைய கண்களேயல்லாது வேறொன்றும் இல்லை.
No comments:
Post a Comment