அறத்துப்பால் | பாயிரம் | அதிகாரம் 2 | குறள்கள்#11-20
11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிர்தம் என்றுஉணரற்ப் பாற்று.
வான் தவறாது மழை பெய்வதால், உலகிலுள்ள உயிர்கள் வாழ்கின்றன; அதனால், அந்த மழை அமிழ்தம் என்று அழைக்கப்படுகின்றது.
12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
உண்பவர்களுக்கு நல்ல உணவுகளை விளைவித்துத் தருவதும், அவர்களுக்கே அருந்தும் உணவாக, நன்மை தரும் சிறப்புடையதும் மழை ஆகும்.
13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால்.
15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
பெய்யாதிருந்து மக்களை கெடுப்பதுவும் மழை, நலிந்தவர்க்குத் துணையாக அவர்தம் வாழ்வில் வளம் சேர்ப்பதுவும் மழையே.
16
விசும்பின் துளி வீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைக்காண்பு அரிது.
17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்.
18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.
20
நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
உள்நின்று உடற்றும் பசி.
உரிய காலத்தில் மழைப் பொழியாமல் பொய்த்துப் போனால், கடல் நீரால் சூழப்பெற்ற, இப்பெரும் உலகில் வாழும் உயிர்களை, பசி எனும் துயர் வந்து, வாட்டி வதைத்து விடும்.
14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால்.
மழை எனும் செல்வ வளம் குறைந்து விட்டால், உழவர்கள் ஏர் கொண்டு உழவு செய்ய இயலாமல் போய் விடும்.
15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
பெய்யாதிருந்து மக்களை கெடுப்பதுவும் மழை, நலிந்தவர்க்குத் துணையாக அவர்தம் வாழ்வில் வளம் சேர்ப்பதுவும் மழையே.
16
விசும்பின் துளி வீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைக்காண்பு அரிது.
வானில் இருந்து மழைத் துளி விழாது போயின், பசும்புல்லின் தலையாகிய அதன் நுனியைக் கூட காண்பது என்பது அரிதாகி விடும்.
17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்.
மேகம் கடலின் நீரை எடுத்து, மீண்டும் மழையாகப் பொழியாமல் போனால், அந்தப் பெரும் கடலின் வளம் கூட குறைந்து விடும்.
18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
உரிய காலத்தே மழை பெய்யாது போனால், வானவராகிய உயர்ந்தோர்க்காக செய்விக்கப்படும் விழாக்கள், வழிபாடுகள் எதுவும் நடைபெறாது.
19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.
வானம் மழை பொழியாது போனால், இப்பெரும் உலகில், தானம், தவம் ஆகிய இரண்டும் இல்லாது போய் விடும்.
20
நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
நீர் இல்லாது போனால், இந்த உலகம் இல்லாது போகும் என்பது போல, மழை பெய்யாது போனால், மனிதர்தம் ஒழுக்கநெறியும் இல்லாது போய்விடும்.
No comments:
Post a Comment