Friday, December 2, 2022

75. அரண்

அதிகாரம் #75 அரண்


(ஒரு நாட்டின் பாதுகாப்பு அமைப்பு)


பொருட்பால் | அங்கவியல் | குறள்# 741-750



741

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்

போற்று பவர்க்கும் பொருள்.


பகைவர் மீது படையெடுத்துச் செல்லும் அரசர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சி புகலிடம் தேடுவோர்க்கும் கோட்டை என்பது சிறந்ததாகும். 


742

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண்.


தெளிந்த நீரும், வெட்ட வெளியாக  அமைந்த நிலப்பரப்பும், உயர்ந்த மலைத்தொடரும், அழகான நிழல் சூழ்ந்த காடும் ஆகிய ஐந்து அங்கங்களையும் உடையதே நாட்டின் அரண் ஆகும். 


743

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்

அமைவரண் என்றுரைக்கும் நூல்.


பகைவர்க்கு எட்ட இயலா உயரம், வீரர்கள் செயலாற்றற்கேற்ற அகலம், யாராலும் உடைத்திடவியலா உறுதி கொண்ட அருந் தன்மை ஆகிய அமைப்புகளையுடையதே அரண் என நூல்கள் செப்பும். 

744

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை

ஊக்கம் அழிப்ப தரண்.


காக்கப்பட வேண்டிய இடம் சிறியதாகவும், உட்பகுதி பரந்த இடமாக அமைந்ததாகவும், எதிர்த்து போரிட வரும் பகைவரின் ஊக்கத்தை அழிக்கவல்லதாகவும் அமைந்திட வேண்டிய ஒன்று அரண் ஆகும். 

745

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்

நிலைக்கெளிதாம் நீரது அரண்.


பலநாட்களாக பகைவர் முற்றுகையிட்டு, கைப்பற்ற இயலாத நிலையில், உள்ளிருந்து போரிடும் படையணிக்குத் தேவையான உணவை கொண்டிருப்பதும், உள்ளிருந்து போரிட வாய்ப்பாகவும் அமைந்திருப்பதும் அரண் எனப்படுவதாம். 

746

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்

நல்லாள் உடையது அரண்.


போருக்கான எல்லாப் பொருட்களையும் உடையதாகவும், வெளியே முற்றுகையிட்டுள்ள எதிரிகளை வீழ்த்திட, உள்ளிருந்து தீரத்தோடு போரிடவல்ல வீரர்களை கொண்டதாகவும் இருப்பது அரண் எனப்படும். 

747

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்

பற்றற் கரியது அரண்.


முற்றுகையிட்டோ, முற்றுகையிடாமலோ போரிட்டும், சூழ்ச்சிகள் வஞ்சனைகள் பலவும் செய்தும் கூட பகைவரால் கைப்பற்ற இயலாத் தன்மையோடு வல்லமை கொண்டதே அரண் எனப்படுவதாகும். 

748

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்

பற்றியார் வெல்வது அரண்.




749

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

வீறெய்தி மாண்ட தரண்.




750

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்கண் இல்லது அரண்.



No comments:

Post a Comment